Monday, April 29, 2024
மேலும்
    Homeஆன்மிகம்தேவிக்குரிய திருநாள்- ஆடிப்பூரத்தின் சிறப்புகள்

    தேவிக்குரிய திருநாள்- ஆடிப்பூரத்தின் சிறப்புகள்

    ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

    ஆடிப்பூரத்தின் சிறப்புகள்:

    ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும்.

    அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடைபெறும் நாள் தான் ஆடிப்பூரம்.

    அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

    ஜூலை 31 தேதி (ஆடி 15) அன்று பிற்பகல் 2.33 மணிக்கு மேல் பூரம் நட்சத்திரம் தொடங்குகிறது.

    வளைகாப்பு விழா:

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், நெல்லையப்பர், அழகர் கோயில், கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளாக ஆண்டாள் ஜெயந்தியும் மிக விமர்சையாக இதே நாளில் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தேரோட்டமும் இந்த ஆண்டு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குழந்தை வரம் அருளும் ஆடிப்பூரம்:

    தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். ஆடிப்பூரம் தினத்தன்று மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்களை பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களை பெண்கள் தங்கள் கைகளில் அணிந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரம் தினத்தன்று அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால், வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த ஆடிப்பூரம் சக்தி ஆலயங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இந்த ஆடி பூரம் விரதத்தை திருமணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் மேற்கொள்கின்றனர். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் என்பது உண்மைதானே.

    ஆடிப்பூரத்தன்று வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்:

    பூஜையறையில் உள்ள அம்பாளின் படத்தை எடுத்து சுத்தம் செய்து, பெண்களுக்கு நலங்கு வைப்பது போல, மஞ்சள் பூசி, சந்தனம் இட்டு குங்குமம் வைக்க வேண்டும். பின்னர், ஒரு மனையை எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, அதன் மேல் கோலம் இட்டு, சிவப்பு நிறத் துணியை விரித்து, அதன் மேல் அம்பாளின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும். கண்ணாடி வளையல்களை மாலையாகக் கட்டி அம்பாளின் படத்துக்கு அணிவிக்க வேண்டும். நாம் எப்படி பூமாலையை அம்பாளின் படத்துக்கு அலங்கரிப்போமோ அதேபோல், கண்ணாடி வளையல் மாலையை அணிவிக்க வேண்டும்.

    சர்க்கரைப் பொங்கல் அல்லது வெல்லம் சேர்த்த பருப்பு பாயசம் போன்ற இனிப்புகளை தயார் செய்வது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்யலாம். அலங்காரம் நெய்வேத்தியம் அனைத்தும் தயாரான பின்பு உங்களுக்கு தெரிந்த அம்பாள் ஸ்தோத்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்யலாம் அல்லது பின்னணியில் ஒலிக்க வைத்து மனமாற பிரார்த்தனை செய்யலாம்.

    நீங்கள் மோட்சம் அடைந்துவிட்டீர்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....