Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாங்கள் சிவசேனாவின் புரட்சியாளர்கள்- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

    நாங்கள் சிவசேனாவின் புரட்சியாளர்கள்- முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

    சிவசேனா கட்சியிலிருந்து விலகி சென்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் துரோகிகள் அல்ல, சிவசேனாவின் புரட்சியாளர்கள் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சிவசேனா கட்சியிலிருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். இதனால் பெரும்பான்மையை இழந்த சிவசேனா கட்சி ஆட்சியை இழந்தது. ஷிண்டேவின் கூட்டணி காரணமாக பெரும்பான்மை பெற்ற பாஜக ஆட்சி அமைத்தது. அதனை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் சிவசேனா கட்சித் தலைமை குறித்து நிலவும் அதிருப்திகளை எளிதில் கடந்து செல்ல முடியாது என ஷிண்டே தெரிவித்துள்ளார். மேலும், உண்மையான சிவசேனா தாங்கள் தான் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூறி வருகிறது. 

    ஷிண்டே தரப்பினரின் இந்த வாதத்துக்கு, கடும் எதிர்ப்பினை உத்தவ் தாக்கரே தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷிண்டே கூறியதாவது:

    சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உருவான மகா விகாஸ் அகாடி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்தது. ஆனால், அந்த ஆட்சியால் சிவசேனா கட்சிக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இந்த ஆட்சியால் தேசியவாத காங்கிரஸுக்கே அதிக பலன் ஏற்பட்டது. மேலும், 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்கவுள்ளதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வந்தனர்.

    மாநிலத்தின் அடுத்த முதல்வராக தேசியவாத கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என அக்கட்சியினர் பேசத்தொடங்கினர்.

    நிலைமை இப்படி இருக்கையில், அடுத்த தேர்தலுக்காக சிவசேனா தரப்பில் எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை. இத்தகைய சூழல் கட்சியில் நிலவுவதால் சிவசேனா எம்எல்ஏக்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைமையை தொடர்பு கொண்டு பல முறை பேசியும் எந்த வித பலனும் கிடைக்கவில்லை. அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் வேறு வழிகளை ஆராய வேண்டிய நிலைக்கு கட்சியின் உறுப்பினர்கள் தள்ளப்பட்டோம்.

    எனக்கு கட்சியைக் காக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டதால், கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தோம். ஏன் கட்சியின் 55 எம்எல்ஏக்களில் 40 பேர் பாஜக ஆட்சியமைக்க ஆதரவளித்தது என்பதை கட்சித் தலைமை சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    அடுத்த அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிசாமி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....