Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு1000 கன அடியில் இருந்து 3000 கன அடி; அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பால் சீறிப்பாயும் செம்பரம்பாக்கம்...

    1000 கன அடியில் இருந்து 3000 கன அடி; அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பால் சீறிப்பாயும் செம்பரம்பாக்கம் ஏரி!

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2000 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்தது.தற்போதும் பெய்து வருகிறது. இதனால், சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக சொல்லப்படும் பிள்ளைப்பாக்கம், நேமம், ஸ்ரீபெரம்பூதூர் ஆகிய ஏரிகள் நிரம்பியதை அடுத்து அங்கிருந்தும் உபரி நீர் திறந்துவிடப்பட்டு, அந்த நீரும், மழை நீரும் அதிக அளவில் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் கொள்ளளவு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

    இதன் காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்குவதாலும், நீர் வரத்து அதிகரிப்பதாலும், உபரி நீர் திறப்பு முதலில் 100 கன அடியில் இருந்து,காலை 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. எச்சரிக்கை ஒலி எழுப்பாமல் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தெடர்ந்து தற்போது இன்னும் அதிகமான உபரிநீரை வெளியேற்ற முடிவுசெய்து 1000-த்திலிருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது உபரி நீர் திறப்பு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 3407 கன அடியாக உள்ளதால், ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கியுள்ளது. 

    மேலும் தொடர் மழை எதிரொலியால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதாலும், புயல் சின்னம் உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைமை செயலகத்தில் புதிய அமைச்சருக்காக தயாராகி வரும் அறை! வருகிற 14-ஆம் தேதி அமைச்சராகிறாரா உதயநிதி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....