Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பா?

    அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பா?

    திமுகவின் அரசின் செயல்பாடுகளை கண்டித்து அஇஅதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இந்த 18 மாதங்களில் மின் கட்டண உயர்வு , பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, உள்ளிட்ட மக்களை நேரடியாக பாதிக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 9ம் தேதி பேரூராட்சிகளிலும், 13 ஆம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தான் ஏற்கனவே 9-ஆம் தேதி பேரூராட்சிகளில் நடைபெறுவதாக இருந்த போராட்டம், மாண்டஸ் புயல் காரணமாக 16-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது நாளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    சென்னை மெட்ரோவில் வாரிசு பட புரோமஷன்…வெளிவந்த வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....