Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவினாடிக்கு 250 கனஅடி நீரை பெரும் செம்பரம்பாக்கம் ஏரி.. திறக்கப்பட்ட பூண்டி..

    வினாடிக்கு 250 கனஅடி நீரை பெரும் செம்பரம்பாக்கம் ஏரி.. திறக்கப்பட்ட பூண்டி..

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

    சென்னைக்கு நீர் ஆதாரங்களாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் விளங்குகின்றன. பூண்டி ஏரியில் இருந்து மழைநீர் மற்றும் பள்ளிப்பட்டு அருகே இருக்கும் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இருக்கும் கண்டலேறு அணியில் இருந்து வரும் நீரை சேமித்து வைத்து, தேவைப்படும் சமயத்தில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுகிறது. 

    மேலும் மாண்டஸ் புயலால் சென்னையைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் ஏரிகளுக்கு நீரின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்தது. 

    இதைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பபு கருதி, கடந்த 9 ஆம் தேதி பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டது. பிறகு கடந்த 12 ஆம் தேதி பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. 

    இந்நிலையில், நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்க முடியும். மேலும், தற்போது ஏரியில் 2.839 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,280 கனஅடியாக இருக்கிறது.

    பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கம்; இடம்பெற்ற பத்து பொருட்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....