Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்வாக்காளர் சிறப்பு முகாம்: இரண்டு நாட்களில் பெறப்பட்ட விண்ணப்பபங்கள் எவ்வளவு தெரியுமா?

    வாக்காளர் சிறப்பு முகாம்: இரண்டு நாட்களில் பெறப்பட்ட விண்ணப்பபங்கள் எவ்வளவு தெரியுமா?

    தமிழகத்தில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமில் இதுவரை 7,10,274 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் அடையாள அட்டை சேர்க்கை, திருத்தம் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 7லட்சத்து 10,ஆயிரத்து 274பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 7 ஆயிரத்து 758 பேரும் உள்ளனா்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    இதில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 4,44,019 பேரும், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கு சுமார் 57,943 பேரும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம் தொடர்பாக 77,698பேரும், இடமாற்றத்திற்காக 1,30,614பேரும் என மொத்தமாக 7,10,274 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்தல் பணிகளை தொய்வில்லாமல் நடத்த நவம்பா் மாதத்தில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வரும் 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.மொத்தமாக இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.

    இதையும் படிங்கநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாள்: நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....