Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபவானி அருகே பயங்கரம் : பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த சிறுவன்... சக்கரத்தில் சிக்கி...

    பவானி அருகே பயங்கரம் : பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த சிறுவன்… சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் எட்டாம் வகுப்பு மாணவன் பலியானான். 

    ஈரோடு மாவட்டத்தின் பவானி அடுத்த ஆனந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதையன் – தங்கமணி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவற்றுள் மூத்த மகன் திவாகருக்கு 13 வயதாகிறது. திவாகர் அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

    இந்நிலையில், எப்போதும் போல் இன்று காலை தனது வீட்டிலிருந்து பள்ளி வேனில் மாணவன் திவாகர் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோனேரிப்பட்டி கதவணை நீர்மின் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராமல் வளைவில் திரும்புகையில் வாகனத்திற்குள் இருந்த திவாகர் வெளியே வந்து விழுந்தார். அதோடு, வாகனத்தின் பின்புற சக்கரம் திவாகர் மீது ஏறி இறங்கியது.

    இந்த விபத்தால், உடல் நசுங்கிய திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்குச் சென்ற மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்கஷட்டர் மீது பாயந்த மின்சாரம்… காவலாளி பரிதாப பலி ! நிறைவடையாத கால்வாயால் நடந்த சோகம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....