Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இராவண கோட்டம் படத்தின் டிரைலர் எப்போது? - வெளிவந்த அப்டேட்..

    இராவண கோட்டம் படத்தின் டிரைலர் எப்போது? – வெளிவந்த அப்டேட்..

    நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள ‘இராவண கோட்டம்’ படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல்-5 ஆம் தேதி வெளியாகிறது.

    ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயரை பெற்றவர்  விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்தான்,  ‘இராவண கோட்டம்’. 

    இப்படத்தில் நடிகர் சாந்தனு, நடிகை கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார்.

    மதயானைக்கூட்டம் பெற்ற படத்தின் வரவேற்பு காரணமாக, இராவண கோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளிவந்த ‘அத்தன பேர் மத்தியில’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாகவே ரசிகர்களிடத்தில் அமைந்துள்ளது. 

    இந்நிலையில், இராவண கோட்டம் படத்தின் டிரைலர் வருகிற 5-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்ஸ்டா கணக்கைத் தொடங்கிய விஜய்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....