Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்ஸ்டா கணக்கைத் தொடங்கிய விஜய்..

    இன்ஸ்டா கணக்கைத் தொடங்கிய விஜய்..

    நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் கணக்குகள் பின்பற்றியுள்ளன. 

    இந்திய திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் முதன்மையானவர், நடிகர் விஜய். இவருக்கென பெரிய ரசிக பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கென ரசிகர்கள் உள்ளனர். 

    கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படமும் நல்ல வரவேற்பை பெற, சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் புரோமோ வீடியோவும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 

    இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ட்விட்டர் கணக்கை மட்டுமே வைத்திருந்த நடிகர் விஜய், தற்போது மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கி உள்ளார்.

    இன்ஸ்டாகிராமின் கணக்கை தொடங்கிய விஜய், தனது முதல் பதிவில், லியோ படத்தின் கெட்டப்பில் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஹலோ நண்பாஸ் மற்றும் நண்பிஸ்’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும், நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய 99 நிமிடங்களில் 1 மில்லியன் கணக்குகள் பின்பற்றியுள்ளன. முன்னதாக, பிடிஎஸ் என்ற இசைக் கலைஞர் 43 நிமிடத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் தற்போது விஜய் உலக அளவில் மூன்றாவது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கை 4.1 மில்லியன் இன்ஸ்டா கணக்குகள் பின்பற்றுகின்றனர்.

    இளம்பெண் குடித்துவிட்டு சாலையில் ரகளை! காதல் தோல்வி தான் காரணமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....