Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி; வெளிவந்த டிரெய்லர்

    விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி; வெளிவந்த டிரெய்லர்

    விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள டிஎஸ்பி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி திரைக்கு வர காத்திருக்க திரைப்படம்தான், டிஎஸ்பி. இத்திரைப்படத்தை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் டிஎஸ்பி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். 

    வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடிக்க, சீமராஜா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் பெரும் ஹிட் அடித்தது. 

    இப்படியாக சூழல்கள் இருக்க, இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் டிஎஸ்பி திரைப்படம் எப்படியிருக்கப் போகிறதென்ற ஆவல் ரசிகர்களிடத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டரும், ‘நல்லா இரும்மா’ என்ற பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், டிஎஸ்பி திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்குபெற்று சிறப்பித்தார். வெளிவந்துள்ள டிரெய்லரின்படி, குடும்ப கமர்ஷியல் திரைப்படமாக டிஎஸ்பி உருவாகியுள்ளது. மேலும், இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

    யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஏன் யூனியன் பிரதேசங்கள்? மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் என்ன வேறுபாடு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....