Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்இளம் விவசாயிகளுக்கு ஏற்ற குறைந்த செலவில் அதிக மகசூல் ஈட்டும் சம்பங்கி சாகுபடி

    இளம் விவசாயிகளுக்கு ஏற்ற குறைந்த செலவில் அதிக மகசூல் ஈட்டும் சம்பங்கி சாகுபடி

    குறைந்த வருமானத்தில் அதிக லாபம் ஈட்ட இளம் விவசாயிகள் இதை ஒருமுறை செய்து பார்க்கலாம் என்று சொன்னால் பல வருடம் அனுபவமிக்க விவசாயிகள் கூறுவது தான் இந்த சம்பங்கி பூ சாகுபடி. 

    சம்பங்கி மலருக்கு தனி சீசன் என்று இல்லை. இது எப்போதும் விழாக்காலங்களில், கோயில்களில், வாசனை திரவியங்களில் பயன்படுத்தக் கூடியது தான். அதனால் இதற்கு எப்போதும் மவுஸ் உண்டு. சிறிய நிலம் தான் அப்படியே எதுவும் விளைவிக்காமல் இருக்கிறது என்றால் இந்த சம்பங்கி பூ சாகுபடியை தாராளமாக கையில் எடுக்கலாம். 

    சம்பங்கி பூ சாகுபடிக்கு எவ்வளவு செலவாகும்?

    குறைந்த முதலீட்டிலேயே இதனை தாராளமாக ஆரம்பிக்கலாம். அரை ஏக்கருக்கு 500 முதல் 600 கிழங்கே போதுமானதாக இருக்கும். அப்படி இன்றைய விலையை வைத்து பார்க்கும்பொழுது ஒரு கிலோ 20 மட்டும் தான். அப்படி என்றால் 10 முதல் 12 ஆயிரம் வரை கிழங்குக்கு மட்டும் செலவாகும். பிற செலவுகள் என்று பார்த்தால், சொட்டுநீர் பாசன அமைப்புக்கு தான். அதுவும் முறை மட்டுமே அடுத்த ஒரு சில வருடங்களுக்கு பராமரிப்பு செலவை தவிர வேறு எதுவும் இருக்காது. 

    சம்பங்கி எந்தெந்த மண்ணில் நன்றாக விளையும்?

    நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இருப்பினும் ஒவ்வொரு மண் தரத்தினை பொறுத்தே பயிர் நன்றாக வளரும். மண்ணின் காரத்தண்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். 

    tuber rose

    எப்படி நடவு செய்ய வேண்டும்?

    சம்பங்கி கிழங்கை நடவு செய்யும் போது ஒரு வரிசைக்கு குறைந்தது 2 அல்லது இரண்டரை அடி இடைவெளியுடன் 2 சென்டி மீட்டர் ஆழத்தில் ஊன்ற வேண்டும். சிலர் இருவரிசை முறைகளிலும் நடவு செய்வது உண்டு. குறைந்தது நன்கு பூத்த மூன்று வருடம் ஆன தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிழங்குகளை நடவு செய்வது சத்தான தன்மையுடன் இருக்கும். சிலர் பார் பிடித்து நடவு செய்வது உண்டு. 

    உரம் தேவையா? அதற்கென்று தனி செலவாகுமா?

    பொதுவாக உரம் இன்றி மண்ணில் உள்ள சத்தை வைத்தே பயிர் செய்வது நலம். இருப்பினும், மாட்டுச் சாண எரிவு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதற்கு முன்பு கரும்பு தோட்டம் வைத்திருப்பவர்கள் அதன் சோகைகளை அப்படியே சேர்த்து உழுதும் பயிர் செய்யலாம். 

    உயிர் உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைக்கும். இருப்பினும் அவற்றை மாதம் ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தேங்காய்ப்பால் மோர் கரைசல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். முடிந்தவரை இயற்கையான உரங்களை பயன்படுத்துவது நல்லது. இது மண்ணின் தரத்தை நிலை நிறுத்த உதவும். 

    sambangi flower

    தண்ணீர் எப்படி பாய்ச்ச வேண்டும்?

    தண்ணீர் செலவும் அதிகமில்லை. சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தினால் இன்னும் செலவு மிச்சம் ஆகும். மேலும் நாட்டு மாடு சாண கரைசல் போன்றவற்றை ஒவ்வொரு செடிகளுக்கும் தனித்தனியே பாய்ச்ச முடியும். ஒருநாளுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுவது பயிர் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். 

    பூச்சி தொல்லை இருக்குமா? 

    பயிர் வளர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு, கிழங்குகளில் வெள்ளை நிறத்தில் பூச்சி பூச்சி தென்படலாம். அப்படி இருக்கும் சமயத்தில், அவ்வப்போது வேப்பம் புண்ணாக்கு கரைசல், கோமியம் போன்றவற்றை சொட்டுநீர் பாசனம் வழியாகவே செலுத்தலாம். 

    கிழங்கு நடவு செய்த 7 நாட்களிலேயே பயிர் முளை விடும். தேவைப்படுகிற சமயத்தில் கைகளை பயன்படுத்தியே களை எடுக்கலாம். பயிர் நட்ட 60 நாட்களையே சம்பங்கி சாகுபடிக்கு வந்துவிடும். 

    Tuberose cultivation

    அரை ஏக்கர் நில பயிருக்கு பூப்பறிக்க ஆள் எதற்கு?

    அரை முதல் 1 ஏக்கர் நிலத்திற்கு ஆள் வைத்து பூக்களை பறிக்க தேவையில்லை. காலையில் எப்போதும் போல் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும் என்பதால், இந்த சம்பங்கி சாகுபடி பகுதி நேர விவசாயமாகவே செய்யலாம். 

    பூத்த சம்பங்கி மலர்களை அதிகாலை வேளையில் பறிப்பதன் மூலம் நல்ல மலர்களை பெறலாம். அதேபோல், அரை ஏக்கர் அளவில் 

    ஒரு நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிலோ பூக்கள் பூக்கின்றன. இவற்றை சந்தைக்கு போக கைக்கு வருமானம் என்றால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும். இது பயிர் வைக்கும் செலவிற்கு போக மீதம் லாபம் உள்ளதே.

    இந்த சம்பங்கி பயிரை 6 முதல் 7 வருடங்கள் வரை வைப்பதால், செலவும் குறைவும் லாபமும் அதிகம் தான்.  

    மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில், செலவு குறைவு, சரியான இயற்கை முறைகளை பார்த்து செய்தால் வருமானம் அதிகம். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....