Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணைந்த படம்; வெளிவந்த ரிலீஸ் தேதி..

    வெங்கட் பிரபு – நாக சைதன்யா இணைந்த படம்; வெளிவந்த ரிலீஸ் தேதி..

    வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மாநாடு, மன்மத லீலை போன்ற வெற்றி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கும் படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நாக சைன்யாவுக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘கஸ்டடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இப்படத்தில் பிரேம்ஜி, சம்பத், பிரியாமணி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

    இந்நிலையில், தற்போது படக்குழு இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கஸ்டடி திரைப்படமானது வருகிற ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

    மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாகும் என்று ரசிகர்கள் நினைக்க, இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக, இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா இத்திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தொடர்ந்து வலம் வந்துகொண்டிருந்தன. ஆனால், தற்போது ஜீவா நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில்தான் அரவிந்த் சாமி நடித்து வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    புத்தாண்டு கொண்டாட்டம்; காவல்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....