Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரசிகர்களிடத்தில் குதூகலத்தை ஏற்படுத்திய வாரிசு படத்தின் போஸ்டர்: கருப்பு உடையில் அட்டகாசமாக தோன்றிய விஜய்

    ரசிகர்களிடத்தில் குதூகலத்தை ஏற்படுத்திய வாரிசு படத்தின் போஸ்டர்: கருப்பு உடையில் அட்டகாசமாக தோன்றிய விஜய்

    Varisu movie poster that created excitement among the fans: Vijay looked dashing in a black suit

    வாரிசு திரைப்படத்தின் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான், வாரிசு. இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்க இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

    பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இதனால், விஜய் ரசிகர்கள் தீபாவளி போனால் என்ன? பொங்கல் ரிலீஸ் இருக்கிறதென்று சந்தோஷப்பட்டுக்கொண்டனர்.

    இந்நிலையில்தான், பிரபாஸின் ஆதிபுருஷ் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு பட ரிலீஸ் தள்ளிவைக்கப்படும் என்று கூறப்பட்டது. காரணம் பிரபாஸ் தெலுங்கில் பெரிய நட்சத்திரம். வாரிசு தமிழ், தெலுங்கு ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆதிபுருஷ் வெளியானால் வாரிசு பட வசூல் பாதிக்கும் என தயாரிப்பாளர் தில்ராஜு கருதுவதாகவும், ரிலீஸ் தேதியை மாற்ற ஆலோசித்துவருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

    இச்சூழலில்தான், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் விஜய் மிகவும் அட்டகாசமாக இருக்கிறார். இதனால் மட்டும் சந்தோஷமல்ல,மற்றொருபுறம் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வாரிசு பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டர் உறுதிசெய்துள்ளது.

    இதையும் படிங்க: ரணகளத்தில் குதூகலம் ! 2 மகன்களுடன் தல தீபாவளி கொண்டாடிய நயன்தாரா – விக்கி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....