Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த முதல் நாளே பிரின்ஸ் , சர்தார் படங்களை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்...!

    வெளிவந்த முதல் நாளே பிரின்ஸ் , சர்தார் படங்களை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்…!

    பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படங்களை விடவும் பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..

    தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ம் தேதி குறைவான எதிரபார்புபடன் கார்த்திக்கின் சர்தாரும், அதிகப்படியான எதிர்பார்ப்புடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது.

    ஆனால், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்களும், கார்த்தியின் சர்தார் படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இருப்பினுமே மக்களிடையே இரண்டு திரைப்படங்களின் மீதான ஆவல் என்பது பெரிய அளவில் இல்லை. மாறாக, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு மக்களிடையே ஆர்வம் குறையவில்லை.

    இதனால், தீபாவளி வெளியீடுகளைத் தாண்டி பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படங்கள் வெளிவந்த அக்டோபர் 21-ம் தேதி மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் ரூ.2 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பொன்னியின் செல்வன் மக்கள் காட்டிய ஆர்வத்தினால் ரூ.450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....