Saturday, May 11, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கடிதம்

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கடிதம்

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்               கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. 

    அந்தக் கடிதத்தில், தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதற்கும், அரசு வேலை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தூத்துக்குடி நிகழ்வு போன்றே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் தாலுகாவிலுள்ள விஏஓ வினோத் குமாரை மணல் கடத்தல் கும்பல் வெட்டிக் கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இத்தகைய சம்பவங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சத்தோடும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர். இருப்பினும் நேர்மையாக வேலை செய்துவருகிறோம். கிராம நிர்வாக அலுவலர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஒரு தற்காப்பு பயிற்சி உடனடியாக வழங்க வேண்டும்.

    தேவைப்படும் பட்சத்தில் கைத் துப்பாக்கி வழங்கவும் அரசு உடனடியாக பரிசீலனை செய்யவேண்டும். புகார் அளித்தால் அரசு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியைத் தளர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பஞ்சாப் மாநிலத்தில் வேலை நேர மாற்றியமைப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....