Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா காலமானார்!

    இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா காலமானார்!

    தமிழ்த் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகர் மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

    1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமான மனோபாலா அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகின.

    நடிப்பு தவிர்த்து ஏராளமான படங்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், கார்த்திக் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....