Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் மாயி சுந்தர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்..

    நடிகர் மாயி சுந்தர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்..

    வெண்ணிலா கபடிக் குழு, ஸ்கெட்ச், குள்ளநரி கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்த மாயி சுந்தர் இன்று காலமானார். 

    மாயி சுந்தர்  – திரையுலகில் நெடுங்காலமாக இயங்கி வந்தாலும் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானார். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்தார். 

    சமீபத்தில் மாயி சுந்தர் சிறு வேடத்தில் நடித்திருந்த கட்டா குஸ்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில், 50 வயதாகும் மாயி சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். 

    மஞ்ச காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த அவர், தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாயி சுந்தர் காலமானார். 

    மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    சமீபத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாற்றியமைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடுமுறை!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....