Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்முதலைக் குட்டிகளையும், பாம்பு குட்டிகளையும் கால்சட்டை வழியே கடத்திய நபர்.. கண்டுபிடித்த காவல்துறை!

    முதலைக் குட்டிகளையும், பாம்பு குட்டிகளையும் கால்சட்டை வழியே கடத்திய நபர்.. கண்டுபிடித்த காவல்துறை!

    வனவிலங்குகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சான் யசிட்ரோ நுழைவு துறைமுகம் பகுதியில் காவல்துறையினர் ஜோஸ் மானுவேல் பேரெஸ் என்ற நபரை சோதனையிட்டனர். அப்போது, அவர் தன்னுடைய மேல் சட்டை, பேன்ட் மற்றும் உடன் கொண்டுவந்திருந்த பைகளில் சுமார் 60 முதலைக் குட்டிகள், பாம்பு குட்டிகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே அவரை சான் யசிட்ரோ காவல்துறை கைது செய்தனர்.

    அவரை விசாரித்ததில், ஜோஸ் மானுவேல் பேரெஸ் தன்னுடைய சகோதரி உள்ளட்ட சிலருடன் சேர்ந்து வனவிலங்குகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்கள் கடத்தலுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

    யுகடன் பாக்ஸ் ஆமைகள், மெக்சிகன் பெட்டி ஆமைகள் மற்றும் குட்டி முதலைகள் உள்ளிட்டவற்றை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு $739,000-க்கு விற்பனை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பெரெஸ் தான் செய்த இரண்டு கடத்தல் சம்பவங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால் ஒரு கடத்தல் சம்பவத்துக்கு 20 ஆண்டுகள் என்ற கணக்கில் 40 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், ஜோஸ் மானுவேல் பேரெஸ் தெற்கு கலிஃபோனியாவைச் சார்ந்தவர். இவர் கடந்த ஆறு வருடங்களாக வனவிலங்குகளை சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு கடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.

    Most Popular