Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை ராணுவம் அத்துமீறல் - ஐ.நா

    இலங்கை ராணுவம் அத்துமீறல் – ஐ.நா

    இலங்கையில் அமைதியாகப் போராடி வந்தவர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்துக்கு முரணானது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஜூலை 22-ம் தேதி அதிபர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருந்த போராட்ட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

    இந்தப் போராட்ட முகாம்களின் மீதான தாக்குதலில், ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் ஈடுபட்டனர். மேலும், இந்தத் தாக்குதலில் பல்வேறு போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர்.

    மேலும், இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு அருகில் நடைபெற்ற இந்தத் தாக்குதலை நேரலையில் உலகுக்கு தெரியசெய்து கொண்டிருந்த செய்தியாளர்கள் மணிகண்டன், அன்பரசன் எத்திராஜன், ஜெரின் சாமுவேல் ஆகியோரும் தாக்கப்பட்டனர். மேலும், ஜெரின் சாமுவேல் கைபேசியைப் பறித்து அதிலிருந்த காணொளிகளை ராணுவ வீரர் ஒருவர் அழித்தார். 

    இந்நிலையில், இச்சம்பவத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கண்டித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கடந்த  ஜூலை 22-ம் தேதி தெரிவித்துள்ளதாவது :

    இலங்கையில் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்துக்கு முரணானது. அவ்வாறான பலத்தைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். 

    மேலும், போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலக பேச்சாளர் ஜெரமி லாரன்ஸ் தெரிவித்துள்ளதாவது :

    இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது. மாறாக, பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும். 

    ஊடகவியலாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களை கண்காணித்து அறிக்கை வெளியிடும் உரிமையுடையவர்கள். எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது .

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த ஜூலை 14-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற முனைந்தனர். அப்போது, அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

    இந்த சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    இந்நிலையில், கொழும்புவின் பல இடங்களில் கடந்த 15-ம் தேதியும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுவாச பிரச்சனை ஏற்பட்டு 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

    இதேப்போல போராட்டக்காரர்கள் தாக்கியதில் ராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 20-ம் தேதி இலங்கை ராணுவம் செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், பொது சொத்துகள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கான பாதுகாப்பு ஆயுதப்படைகளின் பொறுப்பின் கீழ் வருவதால், தேவைப்பட்டால் தங்கள் சக்தியைப் பயன்படுத்த படைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    மக்களின் எழுச்சியை அடக்க இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....