Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதமிழக அரசின் நீட் மசோதா குறித்து மத்திய அரசு பதில்

    தமிழக அரசின் நீட் மசோதா குறித்து மத்திய அரசு பதில்

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் விளக்கமளித்துள்ளார்.

    நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தொடங்கி வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    கடந்த ஜூலை 19ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

    இந்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் கூறியுள்ளதாவது:

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கடந்த  மே மாதம் 2ம் தேதி தமிழக ஆளுநர் மூலம் பெறப்பட்டது. நீட் விலக்கு மசோதா மீது மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுத அமைச்சகம் தனது கருத்துகளை, ஜூன் மாதம் 21 மற்றும் 27ம் தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

    தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். தமிழக அரசு பதிலளித்த பின்பு இறுதி முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்கு தேவைப்படும் கால அவகாசம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்கள் தேர்வு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....