Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்திடீரென படையெடுத்த ஆயிரக்கணக்கான முதலைகள்... மக்களிடம் பீதியை கிளப்பிய வைரல் வீடியோ...

    திடீரென படையெடுத்த ஆயிரக்கணக்கான முதலைகள்… மக்களிடம் பீதியை கிளப்பிய வைரல் வீடியோ…

    ஆயிரக்கணக்கான முதலைகள் தரைப்பரப்பிற்கு வந்து ஓய்வெடுப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுவாக முதலைகள் கடித்து உயிரிழப்பது என்பது பெருகி வரும் நிகழ்வு என்றாலும், முதலைகள் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் சென்றால் எப்போதும் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்துவார்கள் .காரணம் கொஞ்சம் அசந்தாலும் நாம்தான் அதன் கட்டுப்பாட்டிற்கு சென்று உயிரையே பறி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

    அப்படியான நிலையில் பிரேசில் நாட்டில் கடற்கரை போன்ற நிலப்பரப்பு ஒன்றில் திடீரென ஆயிரக்கணக்கான முதலைகள் நீரில் இருந்து வெளியே வந்து ஓய்வெடுப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இக்காட்சியை கென் ருட்கோவ்ஸ்கி என்பவர் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் முதலைகளின் படையெடுப்பை கண்ட உள்ளூர் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், இது பைபிலில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்க தரிசன நிகழ்வாக கூட இருக்குமோ என்ற தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி பீதியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இனி ஓவர் டைமிங் செய்ய முடியாது? தடுக்க வருகிறார் ‘குட்டி எலி’ சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

    இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை (செப் 15 ) அன்று பகிரப்பட்ட இந்த பதிவை இதுவரை 6.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பார்த்து ஷேர் செய்துள்ளதோடு, அந்த முதலைகள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்ற தங்களின் உணர்வையும் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒரு பார்வையாளர் தெரிவித்திருந்த கருத்தில் “இதை படையெடுப்பு என்று அழைக்க வேண்டாம். அதை மீட்டெடுப்பு என்று அழைக்கவும். ஒரு காலத்தில் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தங்களின் வீட்டை மீட்டெடுக்க கடற்கரை நிலப்பரப்பை நோக்கி அந்த முதலைகள் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    மேலும் மற்றொரு பார்வையாளர் “இவை யாக்கரே கெய்மன், என்ற வகையை சேர்ந்த முதலைகள். இவையும் மற்ற முதலைகளைப் போலவே, எக்டோதெர்மிக் அல்லது “குளிர் இரத்தம் கொண்டவை”. தங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்தவும், அதற்காக சூரிய ஒளியை பெறவும் நிலப்பரப்பை நோக்கி வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல் இது கடற்பறப்பே இல்லை என்றும், மக்களால் பயன்படுத்தப்படாமல் விட்ட ஒரு நன்னீர் ஏரி என்றும் சொல்லப்படுகிறது. அதில் வாழும் முதலைகள் ஒரு வகையான ஊசி மூக்கு வடிவ முதலைகள் ஆகும். அதனால் வெகுநேரம் தண்ணீரில் இருக்க முடியாது. மேலும் தான் இனப்பெருக்கம் செய்ய கரைப்பகுதிக்கு தான் செல்ல வேண்டும். இது அதன் இனப்பெருக்க காலத்தில் எடுக்கப்பட்ட காணொளியாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த ஏரியானது மிகப்பெரிய பரப்பை கொண்டதனால், பார்ப்பதற்கு கடல் போலவே காட்சியளிக்கும். இதனால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....