Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரூ.850 கோடி செலவில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயில் புனரமைப்பு திட்டம்-பிரதமர் மோடி அறிவிப்பு

    ரூ.850 கோடி செலவில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயில் புனரமைப்பு திட்டம்-பிரதமர் மோடி அறிவிப்பு

    850 கோடி ரூபாய் மதிப்பிலான உஜ்ஜைன் ஸ்ரீ மகா காளீஸ்வரவர் கோயிலின் முதற்கட்ட பணியை பிரதமர் மோடி தொடனாகி வைத்தார். 

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளன உஜ்ஜைன் நகரில் மகா காளேஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை புனரமைக்கவும் மற்றும் விரிவுபடுத்துவதற்கான 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 

    இந்நிலையில், முதல் கட்ட பணியான மகா காள் நடைபாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். 

    இந்த நடைபாதையில், சிவனின் ஆனந்த தாண்டவத்தை சித்தரிக்கும் வகையில் 108 தூண்கள் காணப்படுகின்றன. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அம்மாநில அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா மற்றும் துளசி ராம் சிலாவா ஆகியோர் வரவேற்றனர். பிறகு, கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி தரிசனம் செய்தார். 

    இதையும் படிங்க:400 கோடியில் உருவாகி வரும் பிரமாண்ட பேருந்து நிலையம்! எப்போது திறக்கப்போகிறார்கள் தெரியுமா?

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில். “மகா காள் லோக் திட்டமானது பக்தர்களுக்கு, சிவ புராணம் தொடர்பான சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும். உலகளாவிய தரத்தை உணர்த்துவதாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....