Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: அரசியல் காரணிகளும் உள்ளனவா? காவல்துறை தகவல்!

    நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: அரசியல் காரணிகளும் உள்ளனவா? காவல்துறை தகவல்!

    தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமானவர். இவரது, தற்கொலை வழக்கு, இன்னும் முடிவுக்கு வராத நிலையில, விசாரணை நடந்து வருகிறது. நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க.-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சித்ரா தற்கொலை:

    சென்னையில் உள்ள திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா. தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தவர். இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி, செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நடிகை சித்ராவை, அவரது கணவரான ஹேம்நாத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டினார் என்று, அவரது தந்தை காமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார்படி, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சித்ராவின் கணவரையும் கைது செய்தனர்.

    கடந்த ஆண்டு 2021 மார்ச் 3ல், ஜாமினில் சித்ராவின் கணவர் வெளியில் வந்தார். சித்ரா தற்கொலை செய்து கொண்டதன் விளைவாக, கணவர் ஹேம்நாத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், தந்தை காமராஜ், தாய் விஜயா, சகோதரி சரஸ்வதி உள்பட பல பேரிடம் நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரித்தனர்.

    சென்னை, புதுக்கோட்டை, பெரம்பலுார் உள்பட பல ஊர்களை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள், சித்ராவின் நட்பு வட்டாரத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.
    ஆனால், இவர்கள் அப்போதைய ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என்பதனால், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை சித்ராவின் கணவரான ஹேம்நாத் புகார் மனு கொடுத்தார். அதில், என்னுடைய மனைவியின் தற்கொலைக்குப் பின், பணம் மற்றும் அதிகார பலம் கொண்ட அரசியல், ‘மாபியா’ கும்பல் உள்ளது.

    சென்னையைச் சேர்ந்த சிலர், அரசியல் பலம் கொண்ட நபர்களிடம், பெரிய அளவில் பணம் வாங்குவதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கு, என்னையே உடந்தையாக்க நினைத்தனர். நான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், என்னையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் என ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ள, யார் காரணம் என்பதனை கண்டறிய வேண்டும். அதற்காக, மீண்டும் வழக்கை விசாரிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளனர்.

    சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு முன்னர், அவருடன் தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியல் போட்டுள்ளனர். நடிகை சித்ரா தற்கொலைக்கு முன்பாக, பெரம்பலுாரில், ‘கிப்ட் ஷாப்’ திறப்பு விழாதனில் பங்கேற்றார். அதன் பின்னர், அப்போதைய அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவரின், தொடர்ச்சியான தொந்தரவுகளே, தற்கொலைக்கு காரணம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அதனால், அவரை காவல் வளையத்துக்குள் கொண்டு வரவும், தீவிர விசாரணை நடத்தப் போவதாகவும், தமிழக அரசின், ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க; மாணவர்களின் திறன் மேம்பட பள்ளிக் கல்வித்துறையின் புது நடவடிக்கைகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....