Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களின் திறன் மேம்பட பள்ளிக் கல்வித்துறையின் புது நடவடிக்கைகள்!

    மாணவர்களின் திறன் மேம்பட பள்ளிக் கல்வித்துறையின் புது நடவடிக்கைகள்!

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் உடல் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் திறன் மேம்பட, வரும் கல்வியாண்டில் புதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. 

    இது குறித்து அறிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த கல்வி என்பது வெறும் எட்டுக்கு கல்வி மட்டுமல்ல! வாழ்க்கை கல்வியும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன், கல்வியின் தரம், மகிழ்ச்சியான கற்றல் சூழல், பெற்றோர்- ஆசிரியர் புரிதல் போன்றவற்றை மேம்படுத்த தமிழ்நாடு அரசு, நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

    கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல், கற்பித்தல் உடல் மற்றும் மனநலனில் ஏற்பட்ட இடைவெளியின் காரணமாக ஆசிரியர்கள், பள்ளிகள் திறந்த பின்னரும் கூடுதல் பொறுப்போடு பாடங்களை கற்பித்து வருவதாகவும் கூறியுள்ளார். 

    ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணிகளுடன் சேர்த்து மாணவர்களின் நலனில் கவனம் செலுத்துவதில் உள்ள சிக்கல்களையும் அரசு அறிந்திருக்கிறது என அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இதனைஅஈ களையும் வண்ணம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படப் போவதாக தெரிவித்துள்ளார். 

    • மாதந்தோறும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் பள்ளி கல்வி மேலாண்மைக்  குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும். இது மாணவர் குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கருத்துக்களை இரு தரப்பும் உணர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும். 
    • கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியில் பள்ளியில் செயல்படாமல் இருக்கும் இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். 
    • மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, அவர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படும். இசை, நாடகம், கவிதை, கதை, ஓவியம் என பல்வேறு போட்டிகள் வண்ணத் திருவிழாக்களாக நடத்தப்படும்.
    • கலை- விளையாட்டுத் துறை மற்றும் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அனைவரும்  உலக, இந்திய மற்றும் மாநில அளவில் கல்விச் சுற்றுலாக்கள் அழைத்து செல்லப்படுவர். 
    • மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு கணினி நிரல் மன்றங்கள் மூலம் கற்பிக்கப்படும்.
    • இணையப் பாதுகாப்பு, எதிக்கல் ஹேக்கிங் போன்றவையும் கற்பிக்கப்படும். இது ஆண்டுதோறும் ஹெக்கத்தான் முறையில் நடத்தப்படும். 
    • வரும் கல்வியாண்டில் முதல் வாரத்தில், குழந்தைகளின் மீதான வன்முறை தடுப்பு  மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் போன்ற விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படும்.
    • மாணவர்களின் உடல் நலத்தை ஆரோக்கியமா வைத்திருக்க, உடலியக்க நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படும். 
    • செயல்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களைக் கொண்டே காய்கறித் தோட்டங்கள் அமைக்கப்படும். இதில் விளையும் காய்கறிகள் சத்துணவில் பயன்படுத்தப்படும். 
    • சதுரங்க விளையாட்டில், ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். வெற்றிபெற்றவர்கள், ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும். 
    • மாணவர்களின் தலைமைப்பண்பு, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை போன்ற செயல்களை ஊக்குவிக்க சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.
      மாணவர்களின் படைப்பு திறனை ஊக்குவிக்க, மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவர இருக்கின்றன. 
    • 3-5 வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல் இதழ்’ . 
    • 6-9 வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு இதழ்’ .
    • ஆசிரியர்களுக்கென நாட்டில் முதன்முறையாக ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளிவர இருக்கின்றது. 
    • அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில், அறிவியலை அறிந்துக்கொள்ள ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற புரிதலோடு, அறிவியலில் ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த திட்டமும் வரவிருக்கிறது.
    • மாதந்தோறும் நடமாடும் அறிவியல் பரிசோதனை கூடங்கள் உரிய வழிக்காட்டுதல்களுடன் மாணவர்களுக்கு அறிவியல் கற்பிக்கப்படும். மாணவர்கள் செய்த கருவிகள் காட்சிப்படுத்தப்படும். 
    • மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் பேரில் மனநல நிபுணர்களின் மூலம் ஆலோசனை வழங்கப்படும். 
    • மாணவர்களின் நல்லியல்புகள் மற்றும் நற்பண்புகளை மேம்படுத்த பெற்றோர், அரசு, பள்ளிக்கூடமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியுள்ளது எனவும் இத்தகைய இணைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான செயல்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு விரைவில் கருணாநிதி நாடு என்று பெயரை மாற்றி வைத்துவிடுவார்கள்- ஜெயக்குமார் கருத்து 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....