Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'சென்னை பஸ் செயலி' சேவையை விரிவுபடுத்தப்பட போக்குவரத்துத்துறை திட்டம்

    ‘சென்னை பஸ் செயலி’ சேவையை விரிவுபடுத்தப்பட போக்குவரத்துத்துறை திட்டம்

    ‘சென்னை பேருந்து செயலி’ சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவையை எளிமையாக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை ‘சென்னை பேருந்து செயலி’ (chennai bus app) மூலம் கைப்பேசியின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. 

    இந்நிலையில், அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு பேருந்து செயலி மூலம் இச்சேவை விரிவுப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தை பயணிகள் தங்களது உறவினர்களுக்கு அனுப்பும் வசதி, பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான முறையிலும் ஏதுவாகவும் இந்தச் செயலி அமைந்துள்ளது. 

    இச்செயலி மூலமாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதே நேரம், இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக முன்பதிவு செய்திருந்த பேருந்து, எந்த இடத்தில வருகிறது போன்ற விவரத்தையும் அறிந்துகொள்ள முடியும். 

    மேலும், அரசு விரைவுப்போக்குவரத்துக்  கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து கொண்டு, அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிடவும் இந்தச் செயலி பயன்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

    பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி வாக்கு சேகரிக்கும் பாஜக, காங்கிரஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....