Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகெடிலம் ஆற்றில் நிகழ்ந்த சோக சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

    கெடிலம் ஆற்றில் நிகழ்ந்த சோக சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

    கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில், கெடிலம் என்ற நதிக்கரை இருக்கிறது. கோடை காலம் என்பதால் மக்கள் பெரும்பாலானோர் இப்பகுதிக்கு குளிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    அப்படி குளிக்க சென்ற நான்கு சிறுமிகள் உட்பட 7 பேர், நீரில் மூழ்கி சிக்கிக் கொண்டுள்ளனர். இதனை கவனித்த நதிக்கரையோரம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ப்ரியா(18), சுமந்தா(18), நவநீதா(18), மோனிஷா(16), சங்கீதா(16), திவியதர்ஷினி(10), பிரியதர்ஷினி என ஏழும் பேரும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

    கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தால்தான் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், இச்செய்தி கேட்டத்தை அடுத்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்படாதது தான்  உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுவதாகவும், இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகவும், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    மேலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்னனர்.  

    கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – தல தோனி நெகிழ்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....