Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஷாருக்கானையும், கத்ரீனாவையும் தாக்கியதா கொரோனா?

    ஷாருக்கானையும், கத்ரீனாவையும் தாக்கியதா கொரோனா?

    மும்பையில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-க்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கத்ரீனா ஏற்கனவே வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது.

    அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இந்தப் படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் நடிகை கத்ரீனா கைப்புக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    கத்ரீனாவின் கணவர் விக்கி கௌசலிற்கு ஐஃபா விருதுகள் விழாவில் சர்தார் உத்தம் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தற்போது கத்ரீனாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் விருது விழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஷாருக்கான்

    இதே போன்று தொற்று காரணமாக ஷாருக்கான் படப்பிடிப்புகளை ஒத்தி வைத்துவிட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணித்தது குறிப்பிடதக்கது.

    கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மும்பையில் பாந்த்ராவை உள்ளடக்கிய பகுதிகளில் இருக்கும் ஸ்டூடியோக்களில் பார்ட்டி நடத்தவேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. யாராவது உத்தரவை மீறி பார்ட்டி நடத்தினால் தங்களுக்குத் தகவல் கொடுக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர்களுடன் பணியாற்றிய மற்றவர்களும் சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பையில் கொரோனா 4வது அலை பரவக்கூடும் என்று மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

    “இதற்காக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். முகக்கவசத்தை அரசு இன்னும் கட்டாயமாக்கவில்லை, இது குறித்து விவாதித்து வருகிறோம். அதே சமயம், மக்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ளவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மகராஷ்டிரா மாநிலத்தில் 1400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் ஒரே நாளில் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் தவறுகள் நேராமல் தடுக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....