Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஐரோப்பாவுக்கு கடல்வழியே சென்ற அகதிகள்; படகு கவிழ்ந்த விபத்தில் 73 பேர் பலி

    ஐரோப்பாவுக்கு கடல்வழியே சென்ற அகதிகள்; படகு கவிழ்ந்த விபத்தில் 73 பேர் பலி

    லிபியாவில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கடல் வழியே சென்ற படகு கவிழ்ந்ததில் 73 அகதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பயணத்திற்கு மைய புள்ளியாக இருப்பது லிபியா நாடாகும். 

    லிபியா எண்ணெய் வளமிக்க நாடாகும். இருப்பினும் இங்கு உள்நாட்டு குழப்பம் மற்றும் அங்கு நடைபெறும் வன்முறை ஆகியவற்றின் காரணமாக பலமான அரசாட்சி நடைபெறாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் இருந்து அந்நாட்டு பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து செல்கின்றனர். 

    அப்படி செல்லும் பொதுமக்கள் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மற்றும் படகுகள் வழியாக பயணிக்கின்றனர். இந்தப் பயணங்கள் ஆபத்து நிறைந்தவையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் வேறு வழியின்றி இந்தப் பயணங்களை முக்கியமானதாக கருதி செல்கின்றனர். 

    இந்நிலையில், லிபிய கடற்கரை பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக புறப்பட்டு சென்ற படகு ஒன்று நேற்று முன்தினம் கடலில் கவிழ்ந்தது. இதில் அகதிகளை மீட்கும் பணி நடைபெற்றது. 

    இதனிடையே ஐ.நா. புலம்பெயர்வோர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 7 அகதிகள் லிபியா கடற்கரை பகுதிகளில் நீந்திக்கரை சேர்ந்ததாகவும், காணாமல் போன 73 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

    இந்திய அணியில் இல்லாதது குறித்து மனம் திறந்த ஷிகர் தவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....