Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவைகை அணையின் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்!

    வைகை அணையின் அழகை காண குவியும் சுற்றுலா பயணிகள்!

    வைகை அணையில் நிரம்பி வழியும் தண்ணீரின் அழகை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் வைகை அணையில் சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பலரும் அங்கு செல்கின்றனர். 

    இதனிடையே, வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் இருந்து தற்போது 67.03 அடி நீர்மட்டம் இருக்கிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு சிறிய மதகுகள் வழியாக மட்டுமே நீர் திறக்கப்பட்டது. 

    இந்நிலையில், 1169 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் 1419 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் அணைக்கான நீர்வரத்து 1025 கன அடியாக இருக்கிறது. பெரிய மதகுகள் வழியே திறக்கப்பட்டதன் காரணமாக வைகை ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து ஓடியது. 

    மேலும், தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் சென்றதால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. 

    உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....