Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள்' - அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வேண்டுகோள்..

    ‘போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ – அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வேண்டுகோள்..

    அதிமுக சார்பில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை புதுச்சேரி மாநிலம் எந்த விதமான அதிகாரமும் இல்லாத மாநிலமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கொண்ட சட்ட மன்றம் அமையவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்கள் வழங்க நம் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து அவசியமான ஒன்றாகும்.

    எந்த தேசிய கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்காமல் தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்டு புதுச்சேரி மாநில நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

    இதனால் மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பின்னுக்குத் தள்ளப்படுகின்றது. அறிவிக்கும் திட்டங்கள் செயல் வடிவம் பெற முடியவில்லை, மருத்துவர் செவிலியர் விரிவுரையாளர்கள் பள்ளி முதல்வர்கள் பி சி எஸ் ஆஃபிசர்கள் உள்ளிட்ட பல அரசு பணியிடங்களுக்கு வட நாட்டைச் சேர்ந்தவர்களே பணியில் அமருகின்றனர்.

    இந்த நிலை மாறிட புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்தப் போராட்டத்திற்கு புதுச்சேரி மாநிலத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தரப்பு மக்களும் வியாபார பெருமக்களும், ஓட்டல் உரிமையாளர்களும் சிறிய பெரிய நடுத்தர கடை வியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும் டெம்போ ஓட்டுநர்களும், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது ஒரு நாள் சிரமத்தை தயைகூர்ந்து பார்க்காமல் மாநில நலனை மட்டும் கருத்தில் கொண்டு நாளை முழு பந்த் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஏழுமலையானுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை கொடுத்த பெண் பக்தர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....