Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

    கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 

    தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று (டிசம்பர் 27) கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். 

    கேரள அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பினராயி விஜயன் பிரதமர் மோடியை தில்லியில் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். 

    கேரள வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல், மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருப்பதை கேரளா முதல்வர் பினராயி விஜயன் எடுத்து கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரள அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் பினராயி விஜயன் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டார். 

    அதே சமயம், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரையில் அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமர் பினராயி விஜயன் குறிப்பிட்டு கூறினார். 

    இந்தச் சந்திப்பின்போது, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு, நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார். தில்லியில் இன்று நடைபெறும் சிபிஎம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பின்ராயி விஜயன் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஏழுமலையானுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை கொடுத்த பெண் பக்தர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....