Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

    நாடு முழுவதும் கொரோனாவை எதிர்கொள்வதற்கான அவசரகால தடுப்பு ஒத்திகை இன்று தொடங்கப்பட்டது. பல மாநிலங்களின் மருத்துவமனைகளிலும் இன்று சுகாதார ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. 

    இந்நிலையில், சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 

    அப்போது அவர், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், 1954 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் கூறினார். 

    புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் காட்சிகள் கண்டதும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை என்றும், பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுகள் உடன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

    மேலும், கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட விதிமுறைகள் இதுவரை தளர்த்தி கொள்ளப்படவில்லை என்றும், விலக்கி கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    பதநீரை மூலப் பொருளாகக் கொண்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டம் – எடுத்துரைத்த அமைச்சர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....