Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதக்காளி விலை மளமளவென உயர்வு; மக்கள் தவிப்பு!

    தக்காளி விலை மளமளவென உயர்வு; மக்கள் தவிப்பு!

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்தால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கிருந்து தான் சென்னை மாற்றும் புறநகர் மக்களுக்கு காய்கறி சப்ளை ஆகிறது. கோயம்பேடு மார்க்கெட் 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய ஒரு சந்தை வளாகமாகும். 1996 இல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள் 2,000 சில்லறை கடைகள் உட்பட சுமார் 3,100 கடைகள் உள்ளன. இவற்றுள் 850 பழக் கடைகள் உள்ளது. இங்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும், வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

    மழைப்பொழிவு, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களினால் கோயம்பேடு சந்தையில் 20-வது நாளாக தக்காளியின் விலை தொடர்ச்சியாக இன்றும் அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    மேலும் ரூ.100க்கு நேற்று விற்பனையான தக்காளி இன்று ரூ.110 க்கு விற்பனையாகிறது. மற்றொருபக்கம் நேற்று ரூ.120 விற்பனையான பீன்ஸ் இன்று ரூ.130 க்கும், நேற்று ரூ. 80க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.90க்கும் விற்பனையாகி வருகிறது.

    கோயம்பேடு சந்தையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 950 முதல் 1,050 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து விற்கப்படுகிறது. மே மாதத்தில் தொடக்கத்திலிருந்தே தக்காளியின் விலை ஏற்றமானது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக 1கிலோ 5ரூபாய்க்கு விற்பனை ஆன தக்காளியால் விவசாயிகளுக்கு அசல் கூட கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் விளைச்சலை குறைத்தனர். இதனால் தற்போது வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 லாரிகள் வரும் நிலையில், விளைச்சல் குறைவு காரணமாக தற்போது 30 லாரிகள் மட்டுமே வருகிறது. இனி வரும் காலங்களில் மேலும் தக்காளி விலை அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவினை வீழ்த்தியது லக்னோ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....