Thursday, March 21, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்

    நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்

    தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பெற தகுதியுடைய அட்டைதாரர்களுக்கு நாளை முதல் டோக்கன் தரப்படவுள்ளது. 

    தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு தரப்பட உள்ளது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    இந்தப் பொங்கல் தொகுப்பு தமிழகத்தில் இருக்கும் 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் தரப்பட உள்ளது. மேலும் வருகிற ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகைக்குள்ளாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புகளை தர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

    இதன் காரணமாக நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவே இந்தமுறை செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஜனவரி 2 ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். அதே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

    ஒவ்வொரு நியாயவிலைக்கடைகளிலும் நாள்தோறும் 100 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் வைத்து வருகின்றனர். 

    வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் – விரைவாக செயல்படுத்த மு.க.ஸ்டாலின் அறிவுரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....