Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'கழிவறை கட்டல, ஆனால் கழிவறை கட்டியாச்சு' - பாய்ந்த வழக்கு!

    ‘கழிவறை கட்டல, ஆனால் கழிவறை கட்டியாச்சு’ – பாய்ந்த வழக்கு!

    பாரத பிரதமர் இலவச கழிவறை திட்டத்தில் கழிவறை கட்டாமல், கட்டியதாக கணக்கு காண்பித்து அரசு பணத்தை கையாடல் செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மறவமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மறவமங்கலம், பால்குளம், பூதக்குடி, பளுவாக்கொடை கிராமங்களில், 2015 முதல் 2019 வரை, பிரதமரின் இலவச தனிநபர் கழிப்பறை திட்டத்தில், 403 கழிப்பறைகள் கட்ட அனுமதி அளித்திருந்தனர்.இதில், 373 மட்டுமே கட்டியுள்ளனர்.

    இந்தக் காலகட்டத்தில் ஒரே குடும்பத்தில் இருவர் பெயரில் கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கி அங்கு ஒரு கழிப்பிடம் மட்டுமே கட்டப்பட்டு மற்ற கழிப்பிடத்திற்கான பணம் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும், வாடகை வீட்டில் வசிப்போர் பெயரிலும் கழிப்பிடம் கட்டியதாக கணக்கு காட்டி மோசடி நடைபெற்றதாகவும், 30 கழிப்பிடங்களை கட்டாமலேயே கட்டப்பட்டதாக அதிகாரிகள் கணக்கு காட்டியதும் அம்பலமானது. ஒரு கழிப்பிடம் கட்ட ரூ.12,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 30 கழிப்பிடங்கள் கட்டாமலேயே கட்டியதாக ரூ.3.60 லட்சம் ரூபாயை மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து பால்குளம் அரியமுத்து மகன் பாண்டி கண்ணன், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்தார். மேலும், கட்டப்பட்டுள்ள பல கழிப்பறைகள் முழுமையாக கட்டப்படாமல் அரைகுறையாக கட்டியுள்ளதாகவும், மறவமங்கலம் ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் இது குறித்து விசாரிக்காமல் கையொப்பமிட்டதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த மறவமங்கலம் ஊராட்சி எழுத்தர் முத்துக்கண்ணு ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து கையாடல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மீது உரிய விசாரணை நடத்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.ராமச்சந்திரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மறவமங்கலம் ஊராட்சி செயலர் முத்துக்கண்ணு காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் பி.டி.ஓ.வாக, பணியாற்றி ஓய்வுபெற்ற செல்வராஜ், அமலற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை, இளங்கோ தாயுமானவர், பி.இளங்கோ, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பிடிஓ ரமேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். இதில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – தல தோனி நெகிழ்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....