Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமூன்று தொடர் தோல்வி அணிகள், ஒரு வெற்றி அணி - ஐபிஎல் டபுள் தமக்காவில் யாருக்கு...

    மூன்று தொடர் தோல்வி அணிகள், ஒரு வெற்றி அணி – ஐபிஎல் டபுள் தமக்காவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    இன்று ஐபிஎல் தொடரில் டபுள் தமாக்கா தினம். இன்று ஐபிஎல் போட்டியில் இரு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

    • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்க்கொள்கிறது.
    • மற்றொரு போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.
    முதல் போட்டி

    தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் இரு அணிகளும் எதிருக்கு எதிர்  இன்று போட்டியிடுவதால் ஏதோவொரு அணி இன்று வெற்றியை ருசித்துவிடும். சென்னை அணியானது தொடர்ந்து ஒருவித பதற்றத்தில் இருப்பதாகவே தெரிகிறது. ஹைதராபாத் அணிக்கும் இதே நிலைமைதான்

    இரு அணிகளும் ஒத்த பலவீனத்தையே கொண்டிருக்கின்றன. இரு அணிளிலும் தொடக்க இணை சோபிக்கத் தவறிவிடுகிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிதாய் தங்களின் வீரியத்தை வெளிப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.  

    தகவல்

    மேலும், இதுவரை நேருக்கு நேர் விளையாடியதில் சென்னை அணி பன்னிரண்டு முறையும், ஹைதராபாத் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இன்றையப் போட்டியில் சென்னை வெற்றிப்பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ரவீந்திர ஜடஜா தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் விளையாடவுள்ள போட்டியானது டி.ஓய். பாட்டில் மைதானத்தில் இன்று 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

    இரண்டாம் போட்டி

    டபுள் தமாக்காவின் மற்றொரு போட்டியில், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்ளவிருக்கின்றன.

    இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது. ஆதலால் இன்று வெற்றி பெற வேண்டும் என்ற வீரியத்துடன் மும்பை அணியானது களமிறங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    ஏழு வருடங்களுக்கு முன்பு மும்பை அணியானது தொடர்ந்து முதல் நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவ, பெங்களூர் அணியுடன்தான் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, அந்த வருடத்தின் கோப்பையையும் வென்றது. ஆதலால், மும்பை ரசிகர்கள் மத்தியில் இன்றைய போட்டியானது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    பெங்களூர் அணியைப் பொறுத்தவரை பலம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மெக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ள நிகழ்வு பெங்களூர் அணிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. 

    தகவல்

    இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், பெங்களூர் அணி 12 முறையும், மும்பை அணி 17 முறையும் வெற்றிப்பெற்றுள்ளது. அதே சமயம், இறுதியாய் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய நான்கு போட்டியில் மூன்று போட்டிகளில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. 

    மும்பை அணி தனது முதல் வெற்றியை இன்றாவது பதிவு செய்யுமா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் போட்டியானது இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....