Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்செல்லப்பிராணிகள்பயங்கரமான வேட்டை நாய், மீம் டெம்ப்ளேட் ஆன கதை : 'ஷிபா இனு' நாயினம் ஒரு...

    பயங்கரமான வேட்டை நாய், மீம் டெம்ப்ளேட் ஆன கதை : ‘ஷிபா இனு’ நாயினம் ஒரு சிறப்பு பார்வை!

    இந்த உலகத்திலேயே இந்த வகை நாய்கள் தான் மிகவும் பிரபலமான நாயாக இருக்க முடியும். மீம் கண்டெண்டுகளில் இருந்து கிரிப்டோ கரன்சி வரை இவை செல்லாத இடமே இல்லை. சீம்ஸ் என்ற பெயரில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் கையில் வைத்துள்ளது ஷிபா இனு நாய்கள். 

    எப்பொழுதும் விழிப்புடணும், சுறுப்பாகவும் இருப்பதால் மலைப்பாங்கான பகுதிகளில் வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பார்ப்பதற்கு அகிட்டா இனு மற்றும் ஹொக்காய்டோ நாய் இனங்கள் ஷிபா இனு போலவே இருந்தாலும் அவை ஷிபா இனுக்கள் அல்ல. ஷிபா இனு நாய் இனங்கள், மற்ற ஜப்பானிய நாய் இனங்களை விட உயரம் குறைவானவை. 

    ஷிபா இனு நாய் இனங்கள் அதிக உரோமம் உள்ள நாய் இனங்கள் ஆகும். இவற்றின் உடலின் 4 முதல் 5 சென்டி மீட்டர் வரை உரோமம் காணப்படும். மழை, பொழியும் பனி ஆகியவற்றில் இருந்து தங்களது உடலைப் பாதுகாத்து கொள்ளவே இவ்வளவு  அடர்த்தியான உரோமத்தை இந்த நாய் இனங்கள் கொண்டுள்ளன. இவற்றின் வால்பகுதி பஞ்சு போன்று சுருண்டு காணப்படும். இந்த வால் அமைப்பு தான் ஷிபா இனு நாய்களின் தனித்தன்மையை மற்ற நாய் இனங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. 

    ஷிபா இனு டூ சீம்ஸ்  

    கடந்த 2013ஆம் ஆண்டு கபோசு என்ற ஷிபா இனு நாயின் போட்டோ இணையதளங்களில் வைரலாக ஆரம்பித்தது. அதற்கு முன்பாகவே 2010 ஆம் ஆண்டு அந்த நாயின் உரிமையாளர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், நாயின் முகபாவனை அனைவரையும் சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவையாக இருந்தது. குறும்புத்தனமாக நக்கலாக மெல்லமாய் சிரிக்கும் அந்த புகைப்படம் அன்றைய மீம் உலகத்தில் பிரபலமடைய ஆரம்பித்தது. 

    இந்த கபோசு நாயினை 2018ஆம் ஆண்டு தத்தெடுத்த ஜப்பானிய மழலையர் பள்ளி ஆசிரியர் அட்சுகோ சாட்டோ, இந்த நாய்க்கு சிட்ரஸ் பழமான கபோசு பழத்தின் பெயரை வைத்தார். அந்த நாயின் முகம் கபோசு பழத்தைப் போல வட்டமாக இருப்பதால் இந்த பெயரை வைத்ததாக அவர் கூறி இருக்கிறார். 

    கபோசுவைப் போலவே மற்றொரு ஷிபா இனு நாயும் மக்களிடையே பிரபலமடைய ஆரம்பித்தது. இதனை மீம் கிரியேட்டர்கள் சீம்ஸ் என்ற பெயரில் அழைத்து வந்தனர். உண்மையில் இந்த நாயின் நிஜப்பெயர் சுகி ஆகும். இந்த பெண் ஷிபா இனு நாயின் உரிமையாளர் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஜோனதன் பிளம்மிங் ஆவார். அவரின் மனைவியின் ஸ்கார்ப்பை சுகி அணிந்திருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி சுகியை சீம்ஸ் ஆக மாற்றியது. 

    ஜப்பானியர்களின் பயங்கரமான வேட்டை நாய் இனம், இன்று உலகையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாய் இனங்களாக மாறிவிட்டன. இதனால், மனிதனுக்கும் நாய்களுக்குமான தொடர்பு மேலும் ஒருபடி இறுக்கியுள்ளது என்றுதான் கூற முடியும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....