Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டில் உயரும் கொரோனா தொற்று; இன்று ஆலோசனை கூட்டம்

    நாட்டில் உயரும் கொரோனா தொற்று; இன்று ஆலோசனை கூட்டம்

    நாட்டில் மேலும் 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் கூறியுள்ளது. 

    மேலும், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக பதிவாகி இருக்கிறது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. 

    அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,43,179 ஆக பதிவாகி இருக்கிறது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 35,173 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

    நாடு முழுவதும் இதுவரை 2,02,05,46,067 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 29,818 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே நாட்டில் கொரோனா தொற்று பரவல், அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை குறித்து இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காணொளி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

    உணவு வகைகள் குறித்த வாக்கெடுப்பு; இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....