Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'வாழ்க அய்யா நல்லக்கண்ணு' - கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை..

    ‘வாழ்க அய்யா நல்லக்கண்ணு’ – கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை..

    பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கக்கூடிய முயற்சிக்கு வழிகாட்டியாக, அய்யா நல்லகண்ணு விளங்கிக் கொண்டிருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 98-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணு-வை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

    கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவர், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்திருக்கக்கூடிய ஒரு அரசியல் சிற்பியாக நமக்கு கிடைத்திருக்கக்கூடிய அய்யா நல்லக்கண்ணு அவர்களுக்கு இன்று 98-வது பிறந்த நாள்.

    அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று அவரை வாழ்த்துகிற அதே நேரத்தில், அவருக்கு என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்து, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    நம்முடைய அன்பிற்கினிய தோழர் முத்தரசன் அவர்கள் சொன்னதுபோல, நம்முடைய தமிழக அரசின் சார்பில், “தகைசால் தமிழர்” விருது ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய தலைவர் பெருமக்களை தேர்ந்தெடுத்து வழங்குவது என்று முடிவெடுத்து, முதலாண்டு மார்க்சிஸ்ட் இயக்கத்தினுடைய மூத்த தலைவர் திரு.சங்கரைய்யா அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம்.

    அதை தொடர்ந்து, 2-ஆவது ஆண்டு நம்முடைய மதிப்பிற்குரிய அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், அந்த தகைசால் தமிழர் விருதிற்கு பெருமை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், இவர்களுக்கெல்லாம், வழங்கிய காரணத்தால்தான், அந்த பெருமை, அந்த விருதுக்கு கிடைத்திருக்கிறது.

    ஆகவே, அந்த உணர்வோடு, அரசின் சார்பில் நான் வழங்கியிருந்தாலும், இன்றைக்கு அரசின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த இனிய நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று அய்யா நல்லகண்ணு அவர்களை வாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.

    இந்த 98 வயதிலும், அவர் தன்னுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் நழுவி விடாமல், கொள்கைக்கு இலக்கணமாக, இலட்சியத்திற்கு இலக்கணமாக, அவர் தன்னுடைய பணியை இந்த தள்ளாத வயதிலும் ஆற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரும்பணி தொடரவேண்டும்.

    இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கக்கூடிய முயற்சிக்கு வழிகாட்டியாக, அய்யா நல்லகண்ணு அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல, இந்த அரசுக்கும், உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உருவாக்கப்பட்டிருக்க கூடிய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கும் ஒரு பக்கபலமாக உறுதுணையாக இருந்து எப்படி தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தொடர்ந்து அவர் வழிகாட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறேன். வாழ்க அய்யா நல்லக்கண்ணு அவர்கள்!

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ‘குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு திருமணம்? ‘ – அமைச்சரின் பேச்சுக்கு ராமதாஸ் ஆதரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....