Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 1 தேர்வை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவில்லை... வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    குரூப் 1 தேர்வை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவில்லை… வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வை 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    குரூப் 1 பிரிவில், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. 

    இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  இந்த தேர்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    தமிழகம் முழுவதும் மூன்று படிநிலைகளைக் கொண்ட குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 38 மாவட்ட மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வு, காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. 

    இந்நிலையில், தேர்வை எழுத 3 ,22 ,414 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,90,057 பேர் மட்டுமே எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம், 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நயன்தாராவின் அடுத்த திரைப்படம் இவருடனா? – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....