Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்மின் கட்டண உயர்வு - தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்.

    மின் கட்டண உயர்வு – தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்.

    மின்சார வாரியத்தின் கட்டண உயர்வுக்கு முழுமையாக விலக்கு அளிக்க கோரி மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

    தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வானது தமிழகத்தில் அமலுக்கு வந்த நிலையில் சாமானிய மக்கள் முதல் தொழிலாளிகள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வானது கொரோனா தொற்றில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களின் தலையில் சுமத்தப்படும் கூடுதல் சுமையாக பார்க்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர் .

    இந்த நிலையில் விலை உயர்வு அமலுக்கு வந்த முதல் நாளில் இருந்தே ,அரசு உயர்த்திய மின் கட்டணத்தால் தொழிலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று , கட்டண உயர்வில் இருந்து முழு விளக்கு அளிக்க கோரி அரசு மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் நாடு முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர் .

    இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு! சங்க விதி மாற்றத்திற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு

    இதனைத் தொடர்ந்து கோவை ,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது . அந்த தீர்மானத்தில் விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் ,இல்லையென்றால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி கூடங்களில் விசைத்தறிகளை நிறுத்தி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .

    இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (செப் 16)அன்று முதல் நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து
    நான்காவது நாளாக இன்றும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட விசைத்தறிக்கு பெயர்போன மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களின் நிறுவனங்களை இயக்காமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுக்கு மாநில அரசானது சில சலுகை அடிப்படையில் மின்சாரம் விநியோகம் செய்து வந்தது. ஆனால் தற்போது சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 30 சதவீதம் விலை உயர்வு அடிப்படையில் இந்த விசைத்தறி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன .மேலும் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறு பரிசீலனை செய்யக்கோரி விசை தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 4 ஆம் நாளாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    இதனால் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள காடா துணி மற்றும் 1 கோடி மீட்டர் அளவிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது . அதேபோல் தினமும் நாளொன்றுக்கு ரூ.35 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக மேலும் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது

    இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் இந்த விலை உயர்வானது தவிர்க்கமுடியாதது. மேலும் மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்யும் பொது விலை உயர்வு குறைவாகவே உள்ளது எனவே விசைத்தறி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....