Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇருபது ஓவரில் இல்லாமல் போன ஜடேஜா....இந்தியாவுக்கு இழப்புதான்..

    இருபது ஓவரில் இல்லாமல் போன ஜடேஜா….இந்தியாவுக்கு இழப்புதான்..

    இருபது ஓவர் உலக கோப்பையிலிருந்து ஜடேஜா விலகியது இந்தியாவுக்கு பெரிய இழப்பு என முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயவர்தனே கருத்து தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் இந்திய அணி பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளானது. 

    குறிப்பாக, இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பெரிதும் தடுமாறியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் காயம் காரணமாக இருபது ஓவர் உலகக் கோப்பை அணியில் ஜடேஜா பெயர் இடம் பெறவில்லை. ஜடேஜா காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததே இந்திய அணியில் அவர் இடம்பெறாததற்கு காரணம் என்று தகவல் வெளிவந்துள்ளது. 

    இதையும் படிங்க : இருபது ஓவர் தொடரில் முகமது ஷமி நீக்கம்… மாற்று வீரர் யார் தெரியுமா ?

    இந்நிலையில், இது குறித்து முன்னாள் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்தனே கூறியதாவது:

    இந்திய அணியில் நம்பர் 5இல் களமிறங்கும் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரும் பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. அவர் இடது கை பேட்டர் என்பதால் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்திடம் மாறினார்கள். நம்பர் 4, 5 இடத்திற்கு யாரை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கிறது. 

    ஜடேஜா இருந்த ஃபார்மிற்கு அவரை இந்த இடங்களில் பயன்படுத்தலாம். பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் சிறப்பான வீரர் ஜடேஜா இல்லாதது இருபது ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய இழப்புதான்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....