Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நெட்ஃபிளிக்ஸில் துணிவு செய்யும் சாதனை!

    நெட்ஃபிளிக்ஸில் துணிவு செய்யும் சாதனை!

    இந்திய அளவில் துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம்தான், துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை என முந்தைய அஜித்குமாரின் முந்தைய படங்களை இயக்கிய எச்.வினோத் குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். 

    போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படமானது, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேநேரம், வசூலில் சில சாதனைகளையும் இப்படம் புரிந்தது.  இதைத்தொடர்ந்து, துணிவு படம் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியானது. 

    படம் வெளியாகி இன்னும் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், துணிவு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கமானது சமூகவலைதளங்களில் பதிவுகளாக எதிரொலித்தது. 

    இந்நிலையில், துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் சாதனைகளை புரிந்து வருகிறது. அந்தவகையில், இந்திய அளவில் துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில், முதல் மற்றும் இரண்டாம் இடத்திலும், தெலுங்கு மொழியில் 4-ஆம் இடத்திலும் துணிவு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    நிலநடுக்கத்தால் உடைந்த அணை; சிரியாவில் மக்கள் அவதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....