Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சமூகவலைதளத்தில் கிண்டல்..விளக்கமளித்த 'துணிவு' பட நடிகை..

    சமூகவலைதளத்தில் கிண்டல்..விளக்கமளித்த ‘துணிவு’ பட நடிகை..

    அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திலிருந்து  ‘காசேதான் கடவுளடா’ எனும் பாடல் குறித்த பதிவுகளுக்கு நடிகை மஞ்சு வாரியர் விளக்கமளித்துள்ளார். 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு தயாராகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். 

    ‘துணிவு’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில், துணிவு திரைப்படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ பாடல் சமீபத்தில் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, நேற்று துணிவு திரைப்படத்திலிருந்து ‘காசேதான் கடவுளடா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை, வைசாக் எழுதி பாடியுள்ளார். மேலும், நடிகை மஞ்சுவாரியரும் இப்பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார். 

    ஆனால், இப்பாடலில், மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறார் என்றே தெரியவில்லை என இணையதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

    இந்நிலையில், மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

    “காசேதான் கடவுளடா” பாடலில் எனது குரல் கேட்கவில்லை என கூறுபவர்கள்  கவனத்திற்கு. கவலைப்பட வேண்டாம். பாடலின் வீடியோ வெர்ஷனுக்கான என்னுடைய குரல் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன். 

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ‘வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி…’ – உலகக் கோப்பை கால்பந்து குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....