Tuesday, March 21, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உங்க ஆதரவு சிங்கத்துக்கா? மானுக்கா? - மோகன்தாஸ் டீசர் பார்வை!

    உங்க ஆதரவு சிங்கத்துக்கா? மானுக்கா? – மோகன்தாஸ் டீசர் பார்வை!

    சைக்கோ திரில்லர் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அப்படியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ராட்சசன் திரைப்படம் பெற்ற வெற்றியின் வீரியத்தை இன்றளவும் நம்மால் காண முடியும். ராட்சசனின் ராட்சத வெற்றியை தொடர்ந்து தமிழ் திரையரங்கில் திரில்லர் திரைப்படங்கள் அடிக்கடி வெளிவந்த நிலையில் உள்ளன்.

    இந்நிலையில், ராட்சசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்னு விஷால் நடிப்பில் மீண்டும் ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள திரைப்படம்தான், மோகன் தாஸ்!

    ராட்சசன் திரைப்படத்தை
    மோகன் தாஸ் திரைப்படமும் தனது டீசரிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆம்! மோகன் தாஸ் திரைப்படத்தின் டீசர்தான் தற்போது பலராலும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

    மகாத்மா காந்தியின் வசனத்தோடு ஆரம்பமாகும் டீசரில் விஷ்னு விஷால் கதை ஒன்றை சொல்கிறார். அவர் கதை சொல்லும் களத்தில் இருந்தே டீசரின் மீதான ஆர்வம் ஆரம்பித்து விடுகிறது.

    நான் சிங்கமா, புலியா, சிறுத்தையா நரியா என்று யோசித்து யோசித்து நான் சிங்கம் என்று விஷ்னு விஷால் சொல்லும் இடமும், இருவேறு பரிணாமமாக விஷ்னு விஷால் காண்பிக்கப்படும் இடமும் டீசரின் உந்து சக்தியாக இருக்கின்றன.

    ‘பசி தாளாத சிங்கம் மான் ஒன்றை வேட்டையாடுகிறது’

    இந்த கூற்றில் நீங்கள் யார் பக்கம் என்ற கேள்வியை நம்மிடம் கேட்டுவிட்டு, நீங்கள் சிங்கத்தின் பக்கம் என்றால் நான் ஹீரோ எனவும் நீங்கள் மானின் பக்கம் என்றால் நான் வில்லன் எனவும் விஷ்னு விஷால் கூறுவது அமர்க்களம்! படிமங்களை அதிகம் கொண்டே மோகன்தாஸின் டீசர் இயங்குகிறது. ஆதலால் திரைப்படத்தின் ஆதிக்கருவை கண்டுபிடிக்க வேணடும் என்ற ஆவலை டீசர் எழுப்பி விடுகிறது.

    டீசர் எழுப்பியிருக்கும் ஆவலை திரைப்படம் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    bjp leader

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி- பாஜக அண்ணாமலை

    மகளிர் உரிமை தொகை திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டுடின் முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர்...