Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவானிலைவெயிலின் உஷ்ணத்தில் இருந்த நமக்கு, குலுகுலு செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்! தகவல் உள்ளே..

    வெயிலின் உஷ்ணத்தில் இருந்த நமக்கு, குலுகுலு செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்! தகவல் உள்ளே..

    சித்திரை மாதமே இன்னும் பிறக்காத நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக வெயிலின் தாக்கம் உள்ளது. பகல் பொழுதுகளில் வெயிலின் உஷ்ணத்தை இப்போதே நாம் உணர ஆரம்பித்து விட்டோம். இப்போதே இப்படியென்றால் சித்திரை பிறந்தால் வெயிலின் அளவு எவ்வளவாக இருக்கும் என்பதை யோசிக்கவே நம்மில் பலரும் பயப்படுகிறோம்.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்தியால், வெயிலின் உஷ்ணத்தில் தவித்த மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். ஆம்!இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானமற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .

    அதேபோல், நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானமற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

    இதோடு,  நேற்று காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது என்றும் இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது 21 ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி காலை நிலைபெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கபட்டுள்ளது.

    வரும் மாதங்களில் வெப்ப அலை வீச அதிக வாய்பிருக்கிறது. அப்படியான வெப்ப அலை குறித்து அறிந்துக்கொள்ள இதை படிக்கவும்:https://www.dinavaasal.com/heat-wave-explaination-and-ready-to-face-heat-wave/

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....