Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்த கேரள அதிகாரிகள் : மீண்டும் பிரச்சினையில் முல்லைப் பெரியாறு...

    முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வந்த கேரள அதிகாரிகள் : மீண்டும் பிரச்சினையில் முல்லைப் பெரியாறு அணை

    கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு அனுமதியின்றி சென்று வந்த 4 கேரள அதிகாரிகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் கடுமையான மழை பெய்த பொழுது முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என கேரள திரைத்துறையினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிரச்சினை செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி வரைத் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றாலும், 138 அடியில் இருக்கும்போதே திறந்து விட வேண்டும் என முரண்டு பிடித்தது. அப்பொழுது, டிகமிஷன் முல்லைப்பெரியாறு என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் பிரபலம் ஆகின. அப்பொழுது சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணை நல்ல வலுவாக இருப்பதாகவும் இப்பொழுது அதனை இடிக்கத்தேவை இல்லை எனவும் ஆனால் புது அணை கட்டப்போகும் கேரள அரசின் முடிவில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். தமிழக அரசும் நீரைத் திறந்து விடுவதாக உறுதி கூறியிருந்தது. வழக்கமாக தேனி மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரே இதுவரை நீரைத் திறந்துவிட்டு வந்த நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் அணை மதகுகளைத் திறந்து விட்டிருந்தது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட வந்திருந்த தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக அதிகாரிகளே திறந்து வைத்ததாகவும், பார்வையிட வந்திருந்த கேரள அமைச்சரும் அதிகாரிகளும் அப்பொழுது உடனிருந்ததாகவும் தெரிவித்தார். 

    இப்படி கடும் பிரச்சினையில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்காமல் கேரள அரசு தடுத்து நிறுத்தி வருகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரளா அதிகாரிகளும் மட்டும் சென்று வருவது வழக்கம். இவ்வாறு செல்பவர்கள் தேக்கடி வழியாக பரிசல் மூலமாகவோ அல்லது வளக்கடவு வழியாக வனப்பகுதிக்குள் வாகனத்திலோ சென்று வருவார்கள். இவ்வாறு செல்பவர்கள் ஏன் செல்கிறார்கள் ? எத்தனை பேர் செல்கிறார்கள் போன்ற தகவல்கள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை பதிவேட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான படகில் 4 கேரள அதிகாரிகள் முறையான அனுமதியின்றி சென்று வந்துள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....