Sunday, April 28, 2024
மேலும்
    Homeஜோதிடம்உங்கள் துணையிடத்தில்.....இந்த வார ராசிபலன்கள்; மேஷம் முதல் கன்னி வரையில் இதோ!

    உங்கள் துணையிடத்தில்…..இந்த வார ராசிபலன்கள்; மேஷம் முதல் கன்னி வரையில் இதோ!

    மேஷம்:

    கடின முயற்சிகளின் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் செயல்களில் வளர்ச்சி பெற விரும்பினால் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வேண்டும். மனச்சோர்வு ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். உங்கள் கீழ் பணிபுரிவோரிடம் நல்ல முறையில் பழகுங்கள். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

    அதற்காக பணத்தை செலவு செய்வீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றிய கவலை உங்களிடம் காணப்படும். தேக ஆரோக்கியம் சிறந்த நிலையில் காணப்படும். உங்களுக்கு தொடை மற்றும் கால்வலி பாதிப்பு ஏற்படலாம். தியானப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    ரிஷபம்:

    உங்களுக்கான வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் ஆதரவை நாடுவதை விட உங்கள் செயல்திறன் மற்றும் திறமையை நம்பி செயல்பட வேண்டும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பொறுமையுடன் இருக்க வேண்டும்.

    உங்கள் நேர்மை உங்களுக்கு வெகுமதியை பெற்றுத் தரும். பணம் அதிகமாக காணப்படும். பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவுசெய்வீர்கள். உங்கள் வார்த்தைகள் உங்கள் துணையின் மனதை காயப்படுத்தும். நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த இதனைத் தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.

    மிதுனம்:

    நீங்கள்செய்யும் செயல்களின் விளைவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருக்க நீங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும். உங்களிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தின் மூலம் எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்று உணர முடியும். ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பதட்டம் காணப்படும்.

    சகபணியாளர்களிடம் நல்லுறவைப் பேணுவது பயனளிக்கும். பணஇழப்பிற்கு வாய்ப்பிருப்பதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.உங்கள் மனதில் உள்ள குழப்பம் உங்கள் மகிழ்ச்சியை தடுக்கும். நிலையான ஆரோக்கியத்திற்கு உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. திடமாக இருக்க யோகா மேற்கொள்ளுங்கள்.

    கடகம்:

    உங்கள் வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முயலுங்கள். பயணங்கள் அதிகம் காணப்படும். அது உங்களுக்கு பயனளிக்கும். பணிச் சூழல் சிறப்பாக காணப்படும். நீங்கள் ஆற்றும் பணிக்காக நற்பெயரை எடுப்பீர்கள். வாரத்தின் துவக்கத்தில் பணத்தை சேமிப்பதற்கும் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கும் உகந்த நாள். ஸ்திரமான நாளாக அமையும். உங்கள் துணையிடம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும். எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக் கொண்டால் எந்தவிதமான ஆரோக்கியப் பிரச்சினையும் வராது.

    சிம்மம்:

    நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் காணப்படும். சிறந்த முறையில் திட்டமிட அமைதியாக செயலாற்றுங்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகபணியாளர்கள் உங்களை பாராட்டுவார்கள். பண இழப்பிற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

    உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறந்து விளங்க அதிக அளவில் நீரைப் பருகவும். தலைவலி மற்றும் சில அசௌகரியங்கள் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மன ஆறுதலைப் பெறலாம்.

    கன்னி:

    இசை கேட்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் உங்களை நிதானப்படுத்தும். உங்கள் செயல்களில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் சிறந்த பணியாற்றும் முறை காரணமாக நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

    நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வங்கியிருப்பு திருப்தியான முறையில் நன்கு பராமரிக்கப்படும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உறவில் நல்லிணக்கத்தை பராமரிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் அதிக ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

    காதலைச் சொல்ல…..இந்த வார ராசிபலன்கள்; துலாம் முதல் மீனம் வரை இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....