Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபத்து மாதங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு; கேரளாவில் ஆய்வு!

    பத்து மாதங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழப்பு; கேரளாவில் ஆய்வு!

    திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் 10 மாதங்களில் 62 விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம், தலைநகர் திருவனந்தபுரத்தில் உயிரியல் பூங்கா அமைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், இங்குள்ள மிருகக்காட்சி சாலையில், மாநில விலங்கு நோய்களுக்கான நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த நிறுவனம் ஆய்வுக் குறித்த அறிக்கையை அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிந்து ராணியிடம் ஒப்படைத்தது.

    அந்த அறிக்கையின் படி, கரும்புலிகளும் புள்ளிமான்களும் அதிக அளவில் காசநோய் பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் அருகில் இருக்கும் ஊழியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளை கொன்று விடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தற்போது நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விலங்குகளின் கூண்டுகளை காலியாக வைத்திருக்க வேண்டும். விலங்குகளுக்கு உணவு, தண்ணீர், வைப்பதற்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கூண்டுகளைக் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். இடப்பற்றாக்குறையும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நோய் தொற்றுக்கும் வழிவகுப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    தொடர் சரிவில் அதானி குழுமம்..அதிகளவில் பங்குகள் வீழ்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....