Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்திருடனாக மாறிய 'இன்ஜினியர்' - ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன வாழ்க்கை

    திருடனாக மாறிய ‘இன்ஜினியர்’ – ஆன்லைன் சூதாட்டத்தினால் பறிபோன வாழ்க்கை

    ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தனது கடனை அடைக்க, செயின் பறிப்பில் ஈடுபட்ட இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. நாம் போடும் பணம் இரட்டிப்பாக வரும் என்ற எண்ணத்தால் பலரும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் களம் இறங்குகின்றனர். ஆனால், அதுதான் சாத்தியமாவது இல்லை.

    பல பேர், பல லட்சம் ரூபாய்களை இழந்து வருகின்றனர். அப்படி பணத்தை இழக்கும் நபர்கள் தற்கொலை செய்யவும் முயல்கின்றனர். மேலும் சிலர் கொலை, கொள்ளையில் ஈடுபடவும் தயாராகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சமீபத்தில் வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, நேற்று மேற்கு மாம்பலம் கிரி தெரு வழியாக தமிழ்ச்செல்வி நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தமிழ்ச்செல்வி அணிந்திருந்த கவரிங் செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

    இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள், அந்த இளைஞரை விரட்டி சென்று பிடித்து நையப்புடைத்து காவல்துறையினிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் சரவணன் என்பதும், சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூபாய் 35 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    மேலும், கடந்த ஓராண்டு காலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சரவணன், அவரிடம் உள்ள மூன்று லட்சம் ரூபாயை இழந்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்பு, இழந்த பணத்தை எல்லாம் மீட்க நண்பர்களிடம் அவர் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, மீண்டும் அவர் ஆன்லைன் சூதாட்டத்தை ஆடியுள்ளார்.

    ஆனால், அந்தப் பணமும் ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோனது. இதைத் தொடர்ந்து, கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பர்கள், அவருக்கு பண நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக, சரவணன் என்ன செய்வது என்று தெரியாமல், செயின் பறிப்பில் ஈடுபட்டு, கடனை அடைத்து விடலாம் என்று திட்டம் போட்டு தமிழ்செல்வியிடம் இருந்து நகையைப் பறித்துள்ளார்.

    இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் சரவணனை கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: அமித் ஷா உயிருக்கு அச்சுறுத்தல் ? மாறுவேடத்தில் ‘ஆபீஸர்’ போல் வந்த நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....